Your First Step Towards Professional Photography
You may one of them who has an average or semi professional (DSLR) camera but most of the time just use it as an automatic camera ,and struggles to use the amazing features inbuilt . You may not know that you can control many of the operations and settings that wrongly adjusted by the camera's automatic settings resulting in out of focus and shots without proper lighting etc. This course is designed for absolute beginners ,to know the most vital and useful setting of the camera along with the basic principles of photography (scenes : eg Portrait/Landscape/Macro/Food etc)
நேர்த்தியான காட்சிப்படுத்தலுக்கான உங்கள் முதல் அடி
உங்கள் கமெராவை முறையாகப் பயன்படுத்தினால் அதி அற்புதமான காட்சிகளை நீங்கள் சிறைப்படுத்தலாம். ஓட்டோமெட்டிக் என்ற சென்ரிங்கினால்தான் உங்களால் வெளிச்சம் குறைந்த சூழ்நிலைகள் ,வேகமாக நகரும் பொருட்கள் , குறித்த இலக்கை மட்டும் தெளிவாக்குதல் போன்ற பல சந்தர்ப்கங்களில் சரியான படங்களை எடுக்க முடிவதில்லை. நம்மில் பலரிடம் டிஐிட்டல் கமெராக்கள் இருக்கின்றன ஆனால் அவற்றை முழுமையாக நாம் பயன்படுத்துவதில்லை.
இந்த குறுகிய காலப் பயிற்சி நெறியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கமெரா உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படும். கற்றலே ஒரு மகிழ்வான அனுபவமாக இருக்கும். உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தீர்த்துக்கொள்ளலாம். தொழில்முறை கமெராக்களை இயக்கி கற்றுக்கொள்ளலாம். பொழுதுபோக்கோ அல்லது எதிர்காலத்தில் தொழிலாகத் தெரிவு செய்யவோ இந்தப்பயிற்சி நெறி நிச்சயம் ஒரு வாசலைத் திறக்கும்.
போட்டோகிறாபிக்கு ஒரு நுழைவாக லெவல் வண் பயிற்சி நெறி அமையும் . பின்னர் கட்டம் கட்டமாக 1 நாளில் சுமார் 3-4 மணிநேரங்கள் நடாத்தப்படும் அடுத்த கட்ட பயிற்சிகளைப் பெற்று போட்டோ கிறாபி அறிவை தொடர்ந்து மேம்படுத்திய இருக்க முடியும். எமது மாணவர்களிற்கு போட்டோகிறாபிக் சொசைட்டி எனப்படும் கே.யு நிறுவனத்தால் நடத்தப்படும் சங்கத்தில் இலவச உறுப்பபுரிமை வழங்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ச்சியான கற்றல் செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவேளைகளில் செயலமர்வுகள் ,கருத்துப்பகிர்வுகள்,சந்திப்புக்கள் என்பன நடாத்தப்படும்.
|